3.9 மில்லியன் மலேசியர்கள் 60 வயதைக் கடந்த முதியவர்கள்

கோலாலம்பூர்:

மலேசியர்களில் 3.9 மில்லியன் பேர் 60 வயதைக் கடந்தவர்கள்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையான 34.1 மில்லியன் பேரில் இது 11.6 விழுக்காடாகும் என்று புள்ளியியல் இலாகா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உஸிர் மஹிடின் தெரிவித்தார்.

கடந்த 1970 ஆம் ஆண்டில் மலேசியாவில் 5.4 விழுக்காட்டினர் மட்டுமே 60 வயதைக் கடந்த முதியவர்களாக இருந்தனர். அதே வேளையில் 44.5 விழுக்காட்டினர் அப்போது 14 வயதுக்கும் குறைவான வயதினரைக் கொண்டவர்களாக இருந்தனர்.

ஆனால் இப்போதோ 14 வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 22.2 விழுக்காடாக குறைந்துவிட்டது. அதே வேளையில் முதியோர் எண்ணிக்கை 11.6 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு 9 மாநிலங்கள் முதியோர் எண்ணிக்கையை அதிகமாகக் கொண்டவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பேராக்கில் 9.9 விழுக்காட்டினரும், கெடாவில் 9.1 விழுக்காட்டினரும். சரவாக்கில் 8.7 விழுக்காட்டினரும், பெர்லிசில் 8.2 விழுக்காட்டினரும்,. சிலாங்கூரில் 8.1 விழுக்காட்டினரும், பினாங்கில் 8.0 விழுக்காட்டினரும், நெகிரி செம்பிலானில் 7.6 விழுக்காட்டினரும். ஜோகூரில் 7.4 விழுக்காட்டினரும், கிளந்தானில் 7.0 விழுக்காட்டினரும் முதிய வர்க்கத்தினராக உள்ளனர்.

முதியோர் நாடு என்ற அந்தஸ்தைக் கடந்த 2021ஆம் ஆண்டே மலேசியா அடைந்துவிட்டது. 2057ஆம் ஆண்டில் முதியோர் எண்ணிக்கை மிக மிக அதிகமாகக் கொண்ட நாடு என்ற அந்தஸ்தை 20 விழுக்காட்டு முதியோரைக் கொண்ட ஜனத் தொகையோடு நாடு பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here