தென்கிழக்கு ஆசியாவிற்கான ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் துணைத் தலைவராக மலேசியாவின் ஒலிம்பிக் மன்றத் தலைவர் டான்ஶ்ரீ Norza Zakaria இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்ற OCA பொதுச் சபையில் 2024-2028 தவணைக்கு Norza Zakaria போட்டியின்றி வெற்றி பெற்றார் என்று OCM அறிக்கை தெரிவித்துள்ளது.
OCM துணைத் தலைவர் ஹமிடின் அமீன் கூறுகையில், Norza Zakaria தேர்வு அவரது தலைமை மற்றும் ஒலிம்பிக் இயக்கத்திற்கான அர்ப்பணிப்புக்கு சான்றாகும். ஐந்து முறை ஒலிம்பிக் வீரரான இந்தியாவின் ராஜா ரந்தீர் சிங், புதிய OCA தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர், ஐந்து துணைத் தலைவர்கள் மற்றும் ஐந்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகள் அனைத்தும் போட்டியின்றி இருந்தன.









