சிரம்பான்:
பத்து வயது மகனை காரோட்ட அனுமதித்த 46 வயது தாய்க்கு சிரம்பான் வாகனப் போக்குவரத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று 700 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட பின்னர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அம்மாதுக்கு மாஜிஸ்திரேட் மர்லிசா முகமட் ஃபாமி அபராதம் விதித்து தண்டனை வழங்கினார்.
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஏழு நாட்களுக்கு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
இவரின் 10 வயது மகன் டொயோட்டா கொரோலா காரை கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி இரவு 9 மணியளவில் சிரம்பான், தாமான் அரோவானா இம்பியான், ஜாலான் அரோவானாவில் ஓட்டிச் சென்று இரண்டு வாகனங்களை மோதியதாக குற்றம்சாட்டப்பட்டது.
அக்காரில் ஒன்பது சிறுவனும் பயணித்தான் என்று சொல்லப்பட்டது.








