சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 4 உள்ள மஸ்ஜித் அன்னூரில் உள்ள இரண்டு நன்கொடைப் பெட்டிகளை ஒரு திருடன் உடைத்து அதில் இருந்து எடுத்து சென்றது 3,000 ரிங்கிட் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மாமட் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை 11.40 மணியளவில் சிசிடிவியில் திருட்டு பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
நீல நிற சட்டை மற்றும் பழுப்பு நிற கால்சட்டை அணிந்த ஒரு நபர், உணவு விநியோக பையை ஏந்தியபடி, இரண்டு நன்கொடை பெட்டிகளைத் திறந்து, மசூதியின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை எடுத்துச் செல்வதைக் காண முடிந்தது. இரவு 9.30 மணியளவில் மசூதியின் செயலாளரால் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.