தெமர்லோ: மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் ஆதரவை அதிகரிக்கவும் கட்சியின் முயற்சிகளை அவர்களுக்கு தெரிவிக்கவும், பாஸ் இளைஞர் தலைவர் அஃப்னான் ஹமிமி தைப் அசாமுதீன் பிரிவின் உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளார். டிக்டாக் போன்ற சமூக ஊடக தளங்கள் உட்பட, மலாய்க்காரர் அல்லாத அதிகமானோர் இப்போது DAPயை வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களை நம் வசம் திருப்ப கட்சி இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அஃப்னான் கூறினார்.
மலாய் அல்லாத சமூகங்கள் பக்காத்தான் ஹராப்பான், குறிப்பாக டிஏபிக்கு தானாக ஆதரவளிக்கின்றன என்ற கருத்தினை பாஸ் இளைஞர் உறுப்பினர்கள் புறந்தள்ளி விடக்கூடாது. எனவே, கட்சியின் தேசிய ஒருமைப்பாட்டுப் பிரிவு மலாய்க்காரர் அல்லாத ஆதரவைப் பெறுவதற்குப் பணிக்கப்பட்டுள்ளது என்றார். அலோர் ஸ்டார் நாடாளுமன்ற உறுப்பினரான அஃப்னான், பாஸ் மலாய்க்காரர் அல்லாதவர்களின் புரிதலை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் பயனுள்ள தகவல்தொடர்புகளை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றார்.
சீன மொழியான மாண்டரின் மொழியைக் கற்றுக்கொள்வது அவசியம் என்றால், அதைக் கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் பேச வேண்டும் என்றால் பேசுங்கள்.
நமது முஸ்லீம் அல்லாத நண்பர்கள் அடைய முடியாதவர்கள் … சரியான படம் மற்றும் துல்லியமான விளக்கங்களை நாம் வழங்கினால் அவர்கள் நமக்கு ஆதரவளிப்பார்கள் என்று அவர் இன்று கெர்டாவ்வில் உள்ள அல்-மக்மூர் வளாகத்தில் நடந்த பாஸ் இளைஞர் கூட்டத்தில் கூறினார்.








