தானே:
மஹாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வாயு கசிவால் ஆம்பர்நாத் நகர் முழுதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது.
மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் ஆம்பர்நாத் நகரில் தனியார் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து வாயு கசிவு வெளியேறியது.
இதன் தொடர்ச்சியாக நகர் முழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. புகை பரவியதால், அதனை சுவாதித்த மக்களுக்கு கண் எரிச்சல், தொண்டை வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆம்பர்நாத் நகர் முழுதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










