கங்கார் அருகே மரத்தின் மீது வேன் மோதியதில் ஓய்வு பெற்றவர் உயிரிழந்தார்; 7 பேர் காயமடைந்தனர்

ஜாலான் கங்கார்-அலோர் ஸ்டார் கம்போங் பெர்மாத்தாங் பாவ், Km9 என்ற இடத்தில் இன்று அதிகாலை,  வேன் சறுக்கி மரத்தில் மோதியதில், ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் வேனில் பின் இருக்கையில் பயணித்த அர்ஷத் ஹனபியா (73) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கங்சார் போலீஸ் தலைவர் ஷரிபுதீன் யூசோப் தெரிவித்தார்.

குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குழு, விடுமுறைக்காக தாய்லாந்தின் கிராபிக்கு செல்வதற்கு முன், பாடாங் பெசார் குடியேற்றம், சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்திற்கு செல்ல அலோர் ஸ்டாரிலிருந்து கங்காருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

சியாமெல் மொராட் (29) என்பவர் ஓட்டிச் சென்ற வேன், சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதாக ஷரிபுதீன் கூறினார். ஓட்டுநரை தவிர்த்து  11 மற்றும் 73 வயதுடைய ஆறு பயணிகளான இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் காயமடைந்துள்ளனர். கனமழை பெய்து கொண்டிருந்த போது இருட்டான இடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் வழுக்கல் ஏற்பட்டது என்றார் ஷரிபுதீன். காயமடைந்தவர்கள் துவாங்கு பௌசியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here