மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: நேரடி போட்டி

ஜோகூர்:

செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவிருக்கும் மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தோர்தலில் பாரிசான் நேஷனல், பக்காத்தான் பெரிக்காத்தான் வேட்பாளர்கள் நேரடியாக களம் காணுகின்றனர்.

பாரிசானைப் பிரதிநிதித்து குளுவாங் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் 40 வயது சைட் ஹுசேன் சைட் அப்துல்லாவும், பெரிக்காத்தானை பிரதிநிதித்து ஜோகூர் மாநில முன்னாள் காற்பந்து விளையாட்டாளரும் பயிற்றுனருமான முகமட் ஹைசான் ஜபாரும் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அவர்களிருவரும் தகுதிப்பெற்ற வேட்பாளர்கள் என்று காலை 10 மணிக்கு நிறைவடைந்த வேட்பு மனு சமர்ப்பிப்புக்கு பின்னர் மக்கோத்தா இடைத் தேர்தல் அதிகாரி அஸூராவதி வாஹிட் தெரிவிததார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here