அச்சு ஊடகத்துறைக்கு அழிவு என்பது இல்லை ; நக்கீரன் கோபால் திட்டவட்டம்

கோலாலம்பூர், ஜூலை 20-

அச்சு ஊடகத்திற்கு அழிவு என்பது இல்லை என தமிழ்நாடு நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களாக அச்சு ஊடகத்துறை இன்றைய காலகட்டத்தில் நிறைய சவால்களைச் சந்தித்து வருவது உண்மைதான். அறிவியல் வளர்ச்சியின் வாயிலாக ஆன்லைன், யூ டியூப், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் இன்று மக்களை ஆக்கிரமித்திருக்கும் உண்மையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனால் அச்சு ஊடகத்துறைக்கு மிகப்பெரிய சவால்கள் ஏற்பட்டிருக்கின்றன என்ற உண்மையை நாம் கூர்ந்து கவனிக்கும் அதே சமயத்தில் இந்தச் சவாலைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளையும் கையாள வேண்டும் என்றார் அவர்.


அறிவியல் வளர்ச்சியின் ஊடாக சமூக வலைத்தளங்கள் தோன்றியுள்ள வேளையில் அந்த அறிவியல் வளர்ச்சியின் நீரோட்டத்தில் அச்சு ஊடகங்களும் முழுமையான ஈடுபாட்டைச் செலுத்தினால் நடப்புச் சவால்களைச் சமாளிக்க முடியும் என்று அவர் சொன்னார்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அச்சு ஊடகங்கள் தொடர்ந்து இயங்கித்தான் வருகின்றன. ஆகவே அச்சு ஊடகங்களுக்கு அழிவு என்பது நிச்சயம் இல்லை. அவை காலத்தை வென்று நீடித்து நிலைக்கும் என்பதில் தமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என்று நக்கீரன் கோபால் குறிப்பிட்டார்.


அறியல் வளர்ச்சிக்கு ஏற்ப அச்சு ஊடகங்களும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு அதனுடைய வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து இயங்கினால் சவால்களை நிச்சயமாகச் சமாளிக்க முடியும் என்றார் அவர்.

முன்னதாக மக்கள் ஓசை தலைமையகத்திற்கு வருகை தந்த நக்கீரன் கோபால் மக்கள் ஓசை இயக்குநர் டத்தோ கோபாலகிருஷ்ணன், ஆசிரியர் குழுவினரையும் மக்கள் ஓசை பணியாளர்களையும் சந்தித்து கலந்துரையாடி மகிழ்ந்தார்.

இதில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் அயலக தொடர்புக்குழுத் தலைவருமான ராஜேந்திரன் பெருமாளும் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here