பிகேஆர் கட்சி தேர்தல் ஒத்திவைப்பு?

கோலாலம்பூர்:

பிகேஆர் உட்கட்சி தேர்தல் 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகே நடத்தப்படலாம் என்று கூறப்படுவதை கட்சியின் புதிய தலைமை செயலாளர் ஃபுஸியா சாலே திட்டவட்டமாக மறுத்தார்.

கட்சி மத்திய தலைமைத்துவ செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் உட்கட்சி தேர்தலை ஒத்திவைப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

இது குறித்து விவாதம் நடைபெற்றது. கருத்துக்களும் சொல்லப்பட்டன. ஆனால் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஃபூஸியா கூறினார்.

எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்னதாக கட்சி தலைமைத்துவத்தின் அனைத்து நிலைகளில் உள்ளவர்களின் முழு ஈடுபாடும் பங்கேற்பும் அவசியம் என வலியுறுத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here