குழந்தையின் மரணத்திற்கு காரணமான குற்றத்தை மறுத்து விசாரணை கோரிய செவிலியர்

கோத்த பாருவில் கடந்த வாரம்  தனது பராமரிப்பில் இருந்த ஒரு மாத ஆண் குழந்தை இறந்ததற்கு புறக்கணிப்பே காரணம் என்ற குற்றச்சாட்டில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் செவிலியர் ஒருவர் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார். 22 வயதான Nur Ain Natasha Mohd Sabri, நீதிபதி அஹ்மத் பஸ்லி பஹ்ருதின் முன் மனு செய்தார்.

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி அதிகாலை 4.47 மணி முதல் 5.30 மணி வரை  சிறைச்சாலை ஒன்றில் குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1) (a) இன் கீழ் கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

அரசுத் தரப்பில் ஆஜரான துணை அரசு வக்கீல் சித்தி எடபாயு சுபான் ஜாமீன் வழங்க கூடாது என்றார். ஆனால் நூர் ஐன் நடாஷா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நூர் அலினி அஹமத் கமில், தனது வாடிக்கையாளர் இன்னும் இளமையானவர் என்பதோடு அவரிடம்  எந்த குற்றப் பதிவு எதுவும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பின்னர் நீதிமன்றம் நூர் ஐன் நடாஷாவுக்கு 10,000 ரிங்கிட் ஜாமீன் வழங்க அனுமதித்ததுடன், மாதத்திற்கு ஒருமுறை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. வழக்கிற்கான அடுத்த தேதி அக்டோபர் 13 என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here