சிரம்பான், மத்திய வளைவு சாலை அருகே, கற்கள் ஏற்றி வந்த இரண்டு லோரிகள் உட்பட, ஒன்பது வாகனங்கள் மோதிய விபத்தில், நான்கு பேர் பலத்த காயம் அடைந்ததாக நம்பப்படுகிறது. மதியம் 1.30 மணியளவில் விபத்து நடந்ததாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
விபத்தில் எஸ்யூவிகள் உட்பட ஏழு கார்கள் மற்றும் இரண்டு லோரிகள் சிக்கின. நான்கு பேரும் ஒரு காரில் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ஜாலான் சிரம்பான் -தம்பின் அருகே நடந்த விபத்தின் புகைப்படங்கள் மற்றும் கிளிப்புகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. நான்கு பேரும் சிக்கிய கார் முற்றிலும் நொறுங்கியது.