கோலாலம்பூர்: தீபகற்ப மலேசியாவில் RON97 பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் செப்டம்பர் 19-25 முதல் லிட்டருக்கு 6 சென் குறைந்து முறையே RM3.19 மற்றும் RM2.95 ஆக இருக்கும்.
புதன்கிழமை (செப். 18) நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்துலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சரிவு மற்றும் ரிங்கிட் வலுவடைந்து வருவதைப் பொருத்தே தீபகற்பத்தில் RON97 பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது.
ஆகஸ்ட் 8, 2024 முதல், தீபகற்ப மலேசியாவில் டீசலின் சில்லறை விலையை அரசாங்கம் லிட்டருக்கு 40 சென்கள் குறைத்துள்ளது. அதே நேரத்தில் RON97 பெட்ரோலின் சில்லறை விலை 28 சென் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
RON95 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு RM2.05 ஆகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் விலை லிட்டருக்கு RM2.15 ஆகவும் இருக்கும். எரிபொருள் விலைகள் தானியங்கி விலையிடல் பொறிமுறையை (APM) பயன்படுத்தி பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை விலையை அடிப்படையாகக் கொண்டவை.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலையின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.