கோலாலம்பூர்:
மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 14 ‘அரோவானா’ மீன்களைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இருவருக்கு எதிராக நேற்று சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மலேசியாவைச் சேர்ந்த 27 வயது லிம் சாங் பூன், மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 25 வயது பெண் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி, குறித்த மீன்களை மலேசியப் பதிவு எண் கொண்ட வாகனத்தில் கடத்தியபோது, உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் இருந்த அதிகாரிகளிடம் சிக்கினர்.
விசாரணையில் லிம் ஓட்டி வந்த வாகனம் கெல்லிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இருப்பினும் சந்தேக நபர்கள் இருவரும் தங்களது குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளவில்லை.
வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தகுந்த உரிமம் இல்லாமல் விலங்குகளைச் சிங்கப்பூருக்குள் கடத்தப்பட்டது நிரூபிக்கப்பட்டால், 6 ஆண்டுகள் சிறை, 5 இலட்சம் வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுவது வழக்கத்திலுள்ளது.









