பதவி விலகச் சொல்லி சும்மா கூச்சலிட்டுக்கொண்டிருக்காமல் தைரியம் இருந்தால் வரும் அக்டோபர் மாதம் கூடும் நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வாருங்கள் என்று எதிர்க் கட்சியினருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சவால் விடுத்தார்.
சட்டத்தை மதியுங்கள். உணர்வுகளோடு விளையாடாதீர்கள். பிரதமர் பதவியில் இருந்து நான் விலக வேண்டும் என்று போகிற போக்கில் கத்திக்கொண்டிருக்காதீர்.
பிரதமர் பதவியில் இருந்து நான் விலக வேண்டும் என்று ஒரு 30 பேர் கத்திக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்றம் இல்லை, சட்டத்திட்டங்கள் இல்லை என்று நினைக்கிறார்களா? என்று டத்தோஸ்ரீ அன்வார் சாடினார்.
சும்மா கத்திக் கொண்டிருக்காமல் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீசை சமர்ப்பியுங்கள். தாமதமானாலும் பரவாயில்ல. நான் ஒப்புதல் தருகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.