கோலாலம்பூர்:
நம்முடைய பிள்ளைகள் ஆய்வுக்கூட எலிகள் அல்ல அவர்களை வைத்து பரிசோதிப்பதற்கு….
யூபிஎஸ்ஆர், பிடி3 முடிந்து போன விவகாரம். இவற்றை உயிர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் தெரிவித்தார்.
முந்தைய கல்வி அமைச்சரின் முடிவு தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இவ்விவகாரம் தொடர்பான எந்தவொரு முடிவும் மேலோட்டமாக இருக்கக் கூடாது. ஒட்டுமொத்தமான ஆய்வுகளுக்கு பின்னரே எந்தவொரு முடிவும் எடுக்கப்பட வேண்டும் என்று ஃபட்லினா தெரிவித்தார்.
நம்முடைய பிள்ளைகள் வெறும் ஆய்வுக்கூட எலிகள் அல்ல, பரிசோதனைக்கு பின் அப்படியே விட்டுச் செல்வதற்கு என்று அவர் கூறினார்.