பினாங்கு:
பினாங்கு மாநில ஜசெக தலைவராக புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம் சி கியோங் தேர்வு செய்யப்பட்டார்.
2024 – 2027 தவணைக்கு தலைவராக பொறுப்பேற்றுள்ள இவர் புதிய செயற்குழுவினரை நியமனம் செய்தார்.
புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் புதிய துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பினாங்கு மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் ஸைரில் கிர் ஜொஹாரி, முன்னாள் அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இயோ சூன் இன் ஆகிய இருவரும் உதவி தலைவர்கள் ஆவர்.
லிம் ஹுய் யிங் செயலாளர் பதவியில் தொடர்கிறார். துணை செயலாளர் ஹிங் மூய் லாய். பொருளாளர்: தே லாய் ஹெங், துணை பொருளாளர்: லே ஹோக் பெங்.
செயற்குழுவில் ஆர்.எஸ்.என். ராயர், டத்தோஸ்ரீ சுந்தராஜ் சோமு ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
1999 ஆம் ஆண்டில் இருந்து பினாங்கு மாநில ஜசெக தலைவராக பொறுப்பேற்றிருந்ந செள கொன் இயோ இம்முறை தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை. பினாங்கு மாநில முதலமைச்சராக இருக்கும் கொன் இயோ தவணை முடியும் வரை அப்பதவியில் தொடர்வார்.