இந்திய சமுதாயத்தின் நலன்கள் காக்கப்பட வேண்டும் -பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகத்துடன் பிகேஆர் இந்தியத் தலைவர்கள் முக்கிய சந்திப்பு

புத்ரா ஜெயா:

ந்திய சமுதாயத்தின் நலன்கள், உருமாற்றம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் செப்டம்பர் 23 ஆம் தேதி திங்கட்கிழமை சிலாங்கூர், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம், ஜோகூர் மாநில கெஅடிலான் தொகுதி இந்தியத் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பை நடத்தினார்.

பிரதமர் துறை அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர், கெஅடிலான் கட்சியின் துணை செயலாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் முக்கிய தலைவராக கலந்து கொண்டார்.

புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்ரமணியம், பாங்கி தொகுதி தலைவரும் கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரியுமான பாலமுரளி, பூச்சோங் தொகுதி தலைவர் அன்பரசன், சுபாங் தொகுதி தலைவர் டாக்டர் பிரவின் முரளி, கோல லங்காட் தொகுதி ஹரிதாஸ், கெப்போங் தொகுதி தலைவர் ஜெயக்குமார், செபூத்தோ தொகுதி தலைவர் அனிதா, ஜோகூர் உலுதிராம் தொகுதி தலைவர் கோபாலகிருஷ்ணன், ஜோகூர் சுப்ரமணியம் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டு இந்திய சமுதாயத்தின் தேவைகளை முன் வைத்தனர்.

தமக்கு எதிராக டிக்டோக் மேலும் சில சமூக ஊடகங்களில் அவதூறு பிரச்சாரம் செய்யப்பபட்டாலும் இந்திய சமுதாயத்திற்கான தம்முடைய கடமைகளையும் பொறுப்புகளையும் தவறாது செய்து கொண்டிருப்பதாக சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.

இதனிடையே இந்த சந்திப்பில் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து டாக்டர் சத்யா பிரகாஷ் விளக்கம் அளித்தார்.

கவனிக்கப்பட வேண்டிய ஒரு சமுதாயமாக இந்திய சமுதாயம் விளங்குகிறது .

ஆகவே இந்தியர்களின் நலன்களுக்கு மடானி அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தொகுதி தலைவர்கள் ஆணித்தரமாக வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here