அலோர் ஸ்டார்:
கெடா சுல்தான் அல்-அமினுல் கரீம் சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பத்லிஷா நேற்று மாலை கெடாவின் சுகா மெனந்தி சுல்தான் அப்துல் ஹலிம் ஸ்டேடியத்தில் உள்ள நிவாரண மையத்தில் தங்கியிருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 170 குடும்பங்களைச் சேர்ந்த 588 பேரை சந்தித்து, ஒரு குடும்பத்திற்கு தலா RM300 என்ற வகையில் நன்கொடையை வழங்கினார்.
சந்திப்பின்போது, 2010 ஆம் ஆண்டைப் போல வெள்ளம் மோசமாக உள்ளதா என்று சுல்தான் கேட்டதுடன், மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து சுல்தான் தனது கவலையை தெரிவித்ததார்.









