கோலாலம்பூர்:
கணவர் செலுத்திய கார் ஆற்றில் விழுந்ததால் வயோதிக மாது ஒருவர் மரணமடைந்தார்.
குவாந்தான், செபெராங் பாலோக், ஜம்பாத்தான் பாலோக் மாக்மூர் என்ற இடத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இன்று காலை 10.30 மணிக்கு நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில் பரிடா டோலா என்ற 67 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது 66 வயது கணவர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அந்தத் தம்பதி பயணம் செய்த புரோட்டோன் சாகா கார் பாலோக் மாக்மூரில் இருந்து செபெராங் பாலோக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயத்தில் அது பாலத்தில் இருந்து சருக்கிச் சென்று ஆற்றில் விழுந்தது என்று குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஸஹாரி வான் பூசு தெரிவித்தார்.