டில்லி அரசை கவிழ்க்க சதி: பா.ஜ., செய்தது இதுதான்; கொளுத்திப் போட்டார் கெஜ்ரிவால்!

புதுடில்லி:

‘டில்லி அரசை கவிழ்க்க என்னை பா.ஜ.க கைது செய்ததாக, அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கூறினார்’ என டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டில்லி பல்கலை பகுதியில் சாலைகளை டில்லி முதல்வர் அதிஷி, ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் கெஜ்ரிவால் கூறியதாவது: நான் பா.ஜ., மூத்த தலைவர் ஒருவரை சந்தித்தேன். நான் அவரிடம் என்னை கைது செய்தால், பா.ஜ.,வுக்கு என்ன லாபம் என்று கேட்டேன்.

அவர் கூறியது என்னை திகைக்க வைத்தது. டில்லி அரசை கவிழ்க்க கைது செய்ததாக அவர் கூறினார்.

அவர்கள் என்னைக் கைது செய்வதன் மூலம் டில்லி மக்களைத் தொந்தரவு செய்ய நினைக்கிறார்களா? நிறுத்தப்பட்ட அனைத்து பணிகளும் மீண்டும் துவங்கப்படும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here