தலையெழுத்தை மாற்றும் சிவ ஸ்தோத்திரம்

கேதார கௌரி விரத நாளில் நாம் 21 முறை மட்டும் பின்வரும் இந்த ஒரு சிவ ஸ்தோத்திரத்தை கூறுவதன் மூலம் நம் வாழ்க்கையில் இதுவரை நாம் அனுபவித்த அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும். நம்முடைய மோசமான தலையெழுத்தும் மாறும். இந்த மந்திரத்தை சுத்தமாக இருக்கக்கூடியவர்கள் தான் கூற வேண்டும். மேலும் இந்த மந்திரத்தை அசைவத்தை சாப்பிட்டுவிட்டு கூறக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தீபாவளி நாள் முழுவதும் விடிய காலையிலிருந்து இரவு உறங்கச் செல்லும் வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை கூறலாம். ராகுகால எமகண்ட நேரத்தை மட்டும் தவிர்த்துக் கொள்வது நல்லது. வீட்டு பூஜை அறையில் சிவபெருமானுக்கு முன்பாக தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அங்கேயே கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கண்களை மூடி சிவபெருமானை மனதிற்குள் கொண்டு வந்து பின்வரும் இந்த ஒரு சிவ ஸ்தோத்திரத்தை 21 முறை கூறி கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய தலையெழுத்து மாறும்.
மந்திரம்
” ஓம் நமஸ்தே அஸ்து பகவன்
விஸ்வேஸ்வராய,
மஹாதேவாய,
த்ரயம்பகாய,
த்ரிபுராந்தகாய,
த்ரிகாலாக்கினி காலாய,
காலாக்னிருத்ராய,
நீலகண்டாய,
ம்ருத்யுஞ்ஜயாய,
ஸர்வேஸ்வராய,
ஸதாசிவாய,
ஸ்ரீமன் மஹாதேவாய நம “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here