கோலாலம்பூர்:
GISBH எனப்படும் குளோபல் இக்வான் சர்வீசஸ், பிஸ்னஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் அமைப்பைச் சேர்ந்த 34 பேர், சொஸ்மா எனப்படும் 2012 பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை) சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்படுவர் என்று ஐஜிபி டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் கூறினார்.
இவர்களின் போலீஸ் தடுப்புக் காவல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இவர்களை சொஸ்மா கீழ் கைது செய்யும் முடிவை போலீஸ் எடுத்திருக்கிறது என்று அவர் சொன்னார்.
தடுப்புக் காவல் காலம் முடிவுற்ற மேலும் 127 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர் என்று ஐஜிபி தெரிவித்தார்.
இது தவிர GISBH உறுப்பினர்கள் நால்வரின் தடுப்புக் காவலை மேலும் 4 தினங்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை பெற்றிருப்பதாக ரஸாருடின் கூறினார்.