மஹ்கோத்தா இடைத்தேர்தல்; 3 மணி நிலவப்படி 43.44% வாக்களித்துள்ளனர்

குளுவாங், மஹ்கோத்தா இடைத்தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 43.44% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் (EC) தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 28) நடைபெற்ற மஹ்கோத்தா மாநில இடைத்தேர்தலில் மொத்தம் 61,397 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாவர். 20 மையங்களில் 109 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இடைத்தேர்தலில் பாரிசான் நேசனல் (BN) கட்சியைச் சேர்ந்த சையத் ஹுசைன் சையத் அப்துல்லா (40) மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கட்சியைச் சேர்ந்த முகமது ஹைசான் ஜாபர் (61) இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here