மாமன்னர் தம்பதியர் சுல்தான் இப்ராஹிம், அவரது துணைவியார் ஜரித் சோபியா, கிளந்தான் சுல்தான் சுல்தான் முஹம்மது V இன் 55வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இன்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் பேஸ்புக்கில் பதிவேற்றிய பதிவில் அரச தம்பதியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அல்லாஹ் அவருக்கு மகிழ்ச்சியையும் நீண்ட ஆயுளையும் வழங்குவானாக என்று அப்பதிவில் கூறப்பட்டுள்ளது. கிளந்தான் மாநிலம் ஒவ்வொரு செப்டெம்பர் 29 அன்று கிளந்தான் சுல்தானின் பிறந்தநாளை பொது விடுமுறை தினமாக கொண்டாடுகிறது.