தமிழக துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை பதவியேற்கிறார்

சென்னை,முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களுடன் தமிழக அமைச்சரவை இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி, தமிழக துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். இதனை தொடர்ந்து, தமிழக துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை பதவியேற்கிறார். இதன்பின்னர், நாளை முதல் துணை முதல்-அமைச்சர் பொறுப்பை உதயநிதி ஸ்டாலின் கவனிப்பார் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

அமைச்சர் உதயநிதியின் கைவசம் இருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையுடன் திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறையும் கூடுதலாக வழங்கப்படுகிறது. அமைச்சர் பொன்முடி வனத்துறையை கவனிப்பார்.

அமைச்சர் மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று, செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன், நாசர் ஆகியோரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here