ஈப்போ:
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பேராக் மாநிலத்தில் பள்ளி மாணவர்களை உட்படுத்திய மொத்தம் 622 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 602 வழக்குகளாக இருந்ததாக மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அஜிசி மாட் அரிஸ் தெரிவித்துள்ளார்.
“அமைச்சகம் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் (PTAs) உட்பட அனைத்து தரப்பினரும் பள்ளி மாணவர்களை உள்ளடக்கிய விபத்துகள் குறைவடைய துணை நிற்பார்கள் என்று நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.
“மாணவர்கள் செய்யும் போக்குவரத்து தொடர்பான குற்றங்களுக்கு தீர்வு காண்பதே எங்கள் முதல் பணி என்றும், இது இறப்பு மற்றும் உடல் ஊனத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்றும் அவர் சொன்னார்.
இன்று செக்கோலா மெனெங்கா கெபாங்சான் டத்தோ ஹாஜி முகமட் தாயிப் பள்ளியில் நடந்த போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.