ஷாஆலம்:
சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணனாக, 1968 பேர் வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இம்மாநிலத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து இங்குள்ள ஷாஆலம், கோம்பாக், கோலா சிலாங்கூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் துணை இயக்குநர் அமாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.