சலவைக் கடைகள், அரசாங்கம் மற்றும் தனியார் பணிபுரியும் கட்டடப் பகுதிகளில் புகைப் பிடிக்கத் தடை செய்யும் சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலாக்கம் பெறும் என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அமாட் தெரிவித்தார்.
இதன் மூலம் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ், பொது மக்களின் நலன் கருதி பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 28ஆக அதிகரிக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2019ம் ஆண்டில் முதன் முதலாக சுகாதார அமைச்சராக பொறுப்பேற்ற சமயத்திலிருந்தே,சலவைக் கடைகளில் புகைப் பிடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தாம் முன் வைத்திருந்ததாகவும் இப்போது அது கைகூடுவது குறித்து தாம் மனநிறைவு கொள்வதாகவும் அவர் கூறினார்.








