பெண்களின் முன்னேற்றத்திற்காக ஒளிச்சுடர்கள் என்ற அரசு சாரா இயக்கம் உதயமாகி இருப்பதாக அதன் தலைவர் கஸ்தூரி தேவி மணிமுத்து தெரிவித்தார். 7 செயற்குழுவினருடன் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் இந்த அரசு சாரா இயக்கம் தொடங்கப்பட்டிருப்பதாக இன்று ராக் ஸ்பேஸ் ரூஃப் டாப் என்ற இடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். தான் அமானா இக்தியாரில் 14 ஆண்டுகள் அனுபவம் இருப்பதால் இந்த இயக்கத்தைத் தொடங்கி இருப்பதாக அவர் கூறினார்.
பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த அரசு சாரா இயக்கம் எதிர்கால சிறகுகள், சரித்திரப் பெண்கள், குயின் மேக்கர்ஸ் ஆகிய பிரிவுகளாக இந்த ஒளிச்சுடர்கள் இயக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
எங்களை போன்ற முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு மித்ரா, தெக்குன் ஆகி கடனுதவி கைக்கொடுத்து வருகிறது என்பதனை மறுக்க முடியாது. ஆனால் ஜுரோ டூ ஹூரோ என்பதற்கேற்ப சில நேரங்களில் அதிகமான தஸ்தாவேஜ்கள் கேட்கும்போது கடனுதவி பெற சிரமமாக இருக்கிறது என்றும் கஸ்தூரி தேவி சொன்னார். இந்த அரசு சாரா இயக்கத்தில் எனது மகன் பிரெய்ன் அமோஸ் அவர்களின் ஈடுபடும் இந்த அரசு சாரா இயக்கத்தில் இருக்கிறது என்றார் அவர்.










