ஷா ஆலம் பெர்சியாரான் ஹிஷாமுடினில் ஸிக்ஸெக் சாலைக் கோடு எதற்கு?

கோலாலம்பூர்:

ஷா ஆலம், பெர்சியாரான் ஹிஷாமுடினிலிருந்து செக் ஷன் 13 இல் இருக்கும் கயாங்கான் சுற்றுவட்டத்திற்கு செல்லும் சாலை ஸிக்ஸெக் வடிவில் வெள்ளைக் கோடுகள் போடப்பட்டிருக்கின்றன.

MBSA எனப்படும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் இப்புதிய முயற்சி அப்பகுதி வாசிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இப்பகுதியில் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் நோக்கத்தில் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது MBSA கார்ப்பரேட், பொது உறவுகள் பிரிவு இயக்குனர் கூறினார்.

இது ஓர் முன்னோட்ட ஆய்வு முயற்சி என்ற அவர், வாகனங்களின் வேகத்தை குறைக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here