அலோர் ஸ்டார்:
நேற்றிரவு முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து கெடா மாநிலத்தில் உள்ள ஒன்பது ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளது.
இன்று காலை 5 மணி நிலவரப்படி, குறித்த 9 ஆறுகளும் குபாங் பாசு (3), பெந்தாங் (1), யான் (1), கோத்தா ஸ்டார் (3) மற்றும் பாலிங் (1)ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கியதாக வெள்ளப் பொதுத் தகவல் பக்கத்தின் மூலம், நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை அறிவித்துள்ளது.
எனவே தாழ்வான பகுதியிலுள்ள மக்களை விழிப்பு நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அது மேலும் கூறியுள்ளது.










