பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி.. தேடிவந்து தாத்தாவை சுட்டுக்கொன்ற குற்றவாளி.. பட்டப்பகலில் கொடூரம்

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் பலாத்கார குற்றவாளி பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் வீட்டுக்கு சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் குண்டு பாய்ந்து சிறுமியின் 60 வயது தாத்தா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிறுமியின் பாட்டி மற்றும் உறவினர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சதர்பூர்[Chhatarpur] பகுதியில் உள்ள மொஹாரா கிராமத்தில் வசித்து வந்த 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் போலா அஹிர்வார் [Bhola Ahirwar] என்ற 24 வயது நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அஹிர்வார் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்ட நிலையில் அவர் போலீசிடம் இருந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளான்.

இந்நிலையில் நேற்று [திங்கள்கிழமை] காலை 10.30 மணியளவில் திடீரென பாதிக்கப்பட்ட 17 சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்த அஹிர்வார் அங்கு இருதவர்கள் மீது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளான். இதனையடுத்து குற்றவாளியைத் தேடும் பணியை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here