பிரபல தொழிலதிபரும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா காலமானார்

மும்பை:இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா.

கடந்த திங்கட்கிழமை அன்று ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதுதொடர்பாக, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடா மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here