மைடினின் தீபாவளி கொண்டாட்டம் – போட்டியில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்

பிரபல பேரங்காடியான மைடினில் தீபாவளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  நாட்டில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளியும்  ஒன்று.  மைடின் பேரங்காடி வருடந்தோறும் பல உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக வசதி குறைந்தவர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் 200 வசதி குறைந்தவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி வருகிறது. இந்தாண்டு பிரகாச ஒளி என்ற கருப்பொருளுடன் மைடின் தங்களின் தீபாவளி கொண்டாடத்தை தொடங்கியுள்ளது.

இந்தாண்டு  தீபாவளியை மேலும் மெருகேற்றும் வகையில்  வாடிக்கையாளர்களுக்காக  2  புதிய போட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்று பேரங்காடியின் நிர்வாக இயக்குநர் மைடின் அலி தெரிவித்தார்.  அதில் முதலாவது  மைடினில் 150 ரிங்கிட்டிற்கு பொருட்களை வாங்கினால் டீன் ஜுவல்லரி வழங்கும் 120,000 ரிங்கிட் மதிப்பிலான தங்க, வைர நகைகளை வெல்லும் வாய்ப்பினை பெறலாம்.

இரண்டாவது டீன் ஜூவல்லரியில் 1,500 ரிங்கிட்டிற்கு நகைகளை வாங்கி அந்த ரசீது நீங்கள் மைடின் பேரங்காடி வழங்கும் சமூக ஊடகத்தில் பகிரும் 30 பேருக்கு 1,500 ரிங்கிட் மதிப்பிலான பற்றுச்சீட்டினை வெல்லும் வாய்ப்பினை பெறலாம். இந்தப் போட்டியில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி வரை மட்டுமே பங்கேற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here