கோலாலம்பூர்:
பிரபல சமூக ஊடக செயலியான ‘tiktok’கின் தாய் நிறுவனமான ‘‘ByteDance’’ தமது மலேசியக் கிளையில் 700க்கும் அதிகமான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் பதிவுகளை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு மூலம் பதிவுகளை கண்காணிக்கும் வேலையை திறம்பட செய்ய முடியும் என்பதால், இந்த ஆடைகுறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு புதன்கிழமை (அக்டோபர் 9) மின்னஞ்சல் வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த ஊழியர்கள் இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசக்கூடாது என்று நிறுவனம் கட்டளையிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆட்குறைப்பு நடவடிக்கை இடம்பெற்றதை ‘tiktok’ உறுதி செய்துள்ளது. இருப்பினும் எத்தனை பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர் என்பது குறித்த விவரங்களை அது வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.










