லஹாட் டத்து:
முதலை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் 10 வயது சிறுவன், துங்குவின் பந்தாய் சினகூட்டில் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டான்.
பாதிக்கப்பட்ட டெனிஸ் ரோடி என்ற குறித்த சிறுவனின் உடல் காலை 9.26 மணியளவில் மீட்கப்பட்டதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி துல்பஹாரின் இஸ்மாயில் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவர் ஐந்து நண்பர்களுடன் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்தபோது, முதலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
பின்னர் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சிறுவனை தேட முயன்றும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
“பின்னர் அவரது மாற்றாந்தாய், சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார் என்றும், கிராம மக்களுடன் பாதிக்கப்பட்டவரைத் தேடுவதற்காக நான்கு காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்,” என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.