திருமணமாகி 10 வருடங்களுக்கும் குறைவான தம்பதிகளிடையே விவாகரத்து விகிதம் அதிகரிப்பு : நான்சி

கோலாலம்பூர்:

திருமணமாகி 10 வருடங்களுக்கும் குறைவான இளம் குடும்பங்களிடையே விவாகரத்து விகிதம் அதிகரித்து வருவதாக பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொதுவாக மலேசியர்கள் திருமண பந்தத்தில் இணையும் சராசரி வயது, பொதுவாக 27 முதல் 28 வயதுக்குள் இருக்கும் என்று டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.

2023 மலேசியாவின் திருமணம் மற்றும் விவாகரத்து புள்ளிவிவர அறிக்கையின்படி, அதிக விவாகரத்து விகிதங்கள் 35 முதல் 39 வயதுடைய ஆண்கள் மற்றும் 30 முதல் 34 வயதுடைய பெண்கள்உள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here