இன்று முதல் அக்.23 வரையிலான பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை- நிதி அமைச்சகம்

கோலாலம்பூர்:

ன்று (அக். 17) முதல் அக்டோபார் 23 வரையிலான காலப்பகுதியில் RON97 மற்றும் RON95 பெட்ரோலின் சில்லறை விலைகள் லிட்டருக்கு முறையே RM3.19 மற்றும் RM2.05 ஆக இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் தீபகற்ப மலேசியாவில் டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு RM2.95 ஆகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் அதே காலகட்டத்தில் லிட்டருக்கு RM2.15 ஆகவும் இருக்கும் என்று நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்துலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here