மலேசியாவில் இருந்து சென்னைக்கு 4 சியமாங் குரங்குகள் மற்றும் 52 பச்சோந்திகள் கடத்தல்; மலேசியப் பெண் கைது

சென்னை:

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட நான்கு சியமாங் குரங்குகள் மற்றும் 52 அரியவகை பச்சோந்தி ஓணான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானப் பயணிகளின் உடைமைகளைச் சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். அவர்களில் பெண் பயணி ஒருவர் சுற்றுலா விசாவில் சென்னைக்கு இரண்டு பெரிய பெட்டிகளுடன் வந்திருந்தார்.

சந்தேகம் அடைந்த அதிகாரிகள், பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது இரண்டு கூடைகளில் 52 அரிய வகை பச்சொந்தி ஓணான்கள், இந்தோனேசிய காடுகளில் வாழும் சியமாங் குரங்குக் குட்டிகள் நான்கு கண்டுபிடிக்கப்பட்டன என்று சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here