கோலா திரெங்கானு:
கடந்த ஆண்டு நவம்பரில் பெண் தொழிலதிபர் ஒருவர் தனது தொழில் பங்குதாரரை கொலை செய்ததாக இன்று திங்கட்கிழமை (அக் 21) உயர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நவம்பர் 1, 2023 அன்று அதிகாலை 3.20 மணி முதல் 4 மணி வரையான காலப்பகுதியில் டெலிகாம் மலேசியா கார்ட் ஹவுஸ் முன்னிலையில், நூர்சிஹான் அப்துல் கரீம், 65, என்பவரைக் கொலை செய்ததாக, நூரைனி ரெமாலி, 36, என்ற பெண்மணி மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கின் சந்தேக நபர், மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
நீதிபதி டத்தோ ஹாசன் அப்துல் கானி முன்னிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அவர் அதனை மறுத்து விசாரணை கோரினார்.









