கூச்சிங்:
வட சரவாக்கில் உள்ள செக்கோலா மெனெங்கா கெபாங்சான் (SMK) லாவாஸ் பள்ளியின் இரண்டு தொகுதிகள் நேற்று இரவு ஏற்பட்ட தீச்சம்பவத்தில் எரிந்து நாசமாயின.
சரவாக்கில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைச் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
முதலில் புதர் தீப்பற்றியதாகக் கூறி, நேற்றிரவு 11.36 மணிக்கு MERS 999 -ற்கு அழைப்பு வந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சரவாக் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
உடனே லாவாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 17 பேர் கொண்ட குழு குறித்த இடத்திற்கு அனுப்பப்பட்டது என்று அவர் கூறினார்.
“இடத்திற்கு வந்தபோது, பள்ளிக் கட்டிடங்களின் இரண்டு தொகுதிகளில் தீ விபத்துக்குள்ளானதாகவும், தீ குறித்த பள்ளிக் கட்டிடத்தின் முழுக் கட்டமைப்பையும் அழித்துவிட்டது என்றும் அவர் சொன்னார்.
இதற்கிடையில், மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு மூன்று முதல் ஏழு நாட்களுக்கு பள்ளியை மூட JBPM உத்தரவிட்டது என்று அவர் மேலும் கூறினார்.







