செப்டம்பர் வரை சுமார் 11.25 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் மலாக்காவுக்கு வருகை

மலாக்கா:

இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சுமார் 11.25 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை மலாக்கா வரவேற்றுள்ளது என்று முதல்வர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ கூறினார்.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மலாக்காவிற்கு வருகை தந்த பார்வையாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 86.56 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும், இதற்கு மாநிலம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளே காரணம் என்றும் அவர் கூறினார்.

“இது விசிட் மலாக்கா ஆண்டு 2024 (VMY2024) என்ற பிரச்சாரத்திற்கு சிறந்த உதாரணம் ,” என்று , நேற்று சுங்கை மலாக்காவிலுள்ள டத்தாரான் பெங்கலான் ராம பந்தாயில் நடைபெற்ற அனைத்துலக கலாச்சார மற்றும் கலை விழாவை (ICAF) தொடங்கி வைத்து, உரையாற்றியபோது அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here