பாலேக் புலாவ், ஜாலான் பெசார் புலாவ் பெதோங்கில் உள்ள டூரியான பண்ணையில் மனிதனுடையது என்று நம்பப்படும் எலும்புக்கூடு வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது என்று தென் மேற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சஷிலீ ஆதாம் தெரிவித்தார். மதியம் 12.35 மணியளவில் மலைச்சரிவில் அமைந்துள்ள டூரியான் பழத் தோட்டத்தில் பல எலும்புகளும் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக சஷிலீ கூறினார்.
சம்பவம் நடந்த இடத்தில் முதற்கட்ட விசாரணையில் மண் குவியலில் சில எலும்புகள் மற்றும் எலும்புக்கூடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே இடத்தில் தொலைபேசியின் துண்டுகள், கோப்பைகள், கம்பி சுருள்கள், உலோக பானைகள் மற்றும் மின்விசிறி துண்டுகள் காணப்பட்டன என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
மரணத்திற்கான காரணத்தை அறிய எலும்புகள் மற்றும் எலும்புக்கூடு பிரேத பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார். தடயவியல் அறிக்கையின் முடிவுகளுக்காக காத்திருப்பு உள்ளிட்ட மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.