பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; உத்தரகண்டில் 36பேர் பலி!

டேராடூன்:

உத்தரகண்ட் மாநிலத்தில் பயணிகள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 36 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா எல்லையில் உள்ள ராம்நகரில் குபி அருகே, 46 பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 36 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி உயிரிழந்த, 36 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமுற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்கான காரணம். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உருண்டு ஓடும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here