பூட்டிய காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சு திணறி பலி: குஜராத்தில் பரிதாபம்

அம்ரேலி: குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டம்,ராந்தியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பரத் மந்தானி. இவரது விவசாய பண்ணையில் மபி மாநிலம் தார் பகுதியை சேர்ந்த கணவன்,மனைவியும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 7 குழந்தைகள் இருந்தனர். அதில் 4 பேர் பரத் மந்தானியின் காரின் கதவை திறந்து உள்ளே ஏறியுள்ளனர். உள்ளே சென்றதும், மீண்டும் கதவை திறக்க முடியாமல் தவித்தனர்.

இதில்,மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். காரின் உரிமையாளரும், குழந்தையின் பெற்றோரும் மாலையில் வந்து பார்த்த போது காருக்குள் 4 குழந்தைகளும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உயிரிழந்த குழந்தைகள் 2 முதல் 7 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here