கோலாலம்பூர்:
அண்மையில் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று தனது இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்தார்.
ஸ்பெயினில் கடந்த வாரம் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் வலென்சியாவில் கடுமையான பேரழிவுகளை சந்தித்துள்ள ஸ்பெயின் மக்களுக்கு எனது இதயப்பூர்வமான அனுதாபங்களை தெரிவிக்க விரும்புகிறேன் என்று பிரதமர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள ஓர் பதிவில் தெரிவித்தார்.
” இந்த கடினமான காலங்களில் ஸ்பெயின் மக்களுடன் மலேசியர்கள் துணை இருக்கிறார்கள் என்று மேலும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வார்கள் என்றும், வரும் நாட்களில் வெள்ள நிலைமை மேம்படும் என்ற ஆர்வத்துடன் நம்பிக்கையுடன் இருக்குமாறும் ” என்று அவர் பேஸ்புக் பதிவில் கூறினார்.