கோலாலம்பூர்: காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட சீனப் பிரஜை ஒருவர் தனியார் பள்ளி அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போனது குறித்த சமூக ஊடகப் பதிவுகளில் இருந்து Patrick @ Qiu Xiangming என அடையாளம் காணப்பட்ட 18 வயது இளைஞன், சனிக்கிழமை (நவம்பர் 9) காலை 9 மணியளவில் ஜாலான் டூத்தா கியாராவில் உள்ள பள்ளியின் வாகன நிறுத்துமிடத்தில் இறந்து கிடந்தார்.
மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்வதற்காக பிரேதப் பரிசோதனையைத் தொடர்ந்து கோலாலம்பூர் காவல்துறையால் மரணம் குறித்த முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியு கடைசியாக சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சோலாரிஸ் மவுண்ட் கியாரா பகுதியில் காணப்பட்டார். மேலும் அதிகாலை 4 மணியளவில் அவர் காணாமல் போனதாக ஒரு அறிக்கை பதிவு செய்யப்பட்டது.