கோலாலம்பூர்:
நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில ஜசெக தேர்தலில் அதன் தலைவராக கின்றாரா சட்டமன்ற உறுப்பினர் எங் ஷீ ஹான் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேவேளையில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் மாநிலத்தின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதுவரை சிலாங்கூர் மாநில ஜசெக தலைவராக பதவிவகித்த அமைச்சர் கோபிந்த் சிங் டியோவிற்கு பதிலாக அவர் இந்த பதவியை ஏற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற மாநில தேர்தலில் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ யீ பின் 1,180 வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தியூ வேய் காங் 1,115 வாக்குகளை பெற்றார். அதேநேரம் எங் ஷீ ஹான் 1,058 வாக்குகளும், பந்திங் சட்டமன்ற உறுப்பினர் வீ. பாப்பாராயுடு 1,028 வாக்குகளும், கணபதி ராவ் 1,020 வாக்குகளும் பெற்றனர்.

அதேநேரம் துணைத் தலைவர் பதவியை Ng Suee Lim மற்றும் Mr Yong Hian Wah ஆகியோர் நிரப்பியுள்ளனர்.
இந்த தேர்தலில் அதிகபட்சமாக 1,180 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தில் இருந்த போதிலும், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யின் சிலாங்கூர் மாநில ஜசெக செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.









