டேட்டிங் சென்ற 50 வயது முதியவரை கடத்திய மர்ம கும்பல்- ரகசிய ஆப்ரேசன் நடத்தி மீட்ட போலீஸார்

உத்திரபிரதேச மாநிலத்தில் ‘பிளைண்ட் டேட்டிங்’ சென்ற 50 வயது முதியவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து 3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரை சேர்ந்த லல்லு என்ற 50 வயது முதியவருக்கு ஒரு பெண்ணிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. தன்னிடம் செல்போனில் பேசிய பெண்ணை சந்திப்பதற்காக அந்த முதியவர் ஜான்சி நகருக்கு டேட்டிங் சென்றுள்ளார்.

அந்த இடத்தில அந்த முதியவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து அவரது குடும்பத்தினரிடம் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் முன்பணமாக ரூ.1 லட்சத்தை கடத்தகாரர்களிடம் அவரது குடும்பத்தினர் கடத்தல்காரர்களிடம் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, லல்லுவின் மகன் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ரகசிய ஆப்ரேசன் நடத்திய போலீஸார் கடத்தல்காரர்களிடம் இருந்து லல்லுவை மீட்டனர்.

லல்லு கடத்தப்பட்ட வழக்கில் ஒரு பெண்   உட்பட
3 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம்  போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பெண்களை பயன்படுத்தி ‘ஹனிட்ராப்’ முறையில் ஏற்கனவே பலரை இந்த கும்பல் கடத்தியுள்ளது என்பதை  போலீஸார் கண்டுபிடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here